படிப்பு, மதிப்பெண், வேலை என்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சீன மாணவர்களுக்கு அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ‘காதலிக்கச் சொல்லி’ வினோதமான விடுமுறை ஒன்றை அறிவித்துள்ளது.
சீனாவின் பல மாகாணங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், திருமணங்களின் எண்ணிக்கை சரிவதாலும் கவலையடைந்துள்ள அரசு, மாணவர்களைப் பூக்களை ரசிக்கவும், காதலிக்கவும் ஊக்கப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வசந்த காலத்தின் இடைக்கால விடுமுறையை (Spring Break) இதற்காகவே பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள அந்தப் பல்கலைக்கழகம், மாணவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மதிப்பெண்களை விட வாழ்க்கையை ரசிப்பதே முக்கியம் என்ற தொனியில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் நாட்டின் மக்கள்தொகை சரிவையும், உள்நாட்டு நுகர்வையும் அதிகரிக்கச் செய்ய எடுக்கப்பட்ட ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

