Sunday, March 22, 2026
HomeUncategorizedநடிகர் மோகன் நடித்துவரும் 'ஹரா' படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் மோகன் நடித்துவரும் ‘ஹரா’ படப்பிடிப்பு நிறைவு..!

கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் திரைப்படம் ‘ஹரா’. இந்த படத்தை விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மோகன் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் என்றும் தந்தை மகள் சென்டிமென்ட் கொண்ட இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஏற்கனவே தெரிவிச்சிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்க உள்ளன. முதல் கட்டமாக அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்குது

லியாண்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கும் இந்தப் பாடலை விஜய்ஸ்ரீ எழுதியுள்ளார் என்பதும் மகாலிங்கம் மற்றும் சக்தி முரளிதரன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments