Thursday, February 5, 2026
Homeசெய்திகள்மும்பை மாநகரில் முதன்முறையாக தமிழில் பகவத் கீதை சொற்பொழிவு!

மும்பை மாநகரில் முதன்முறையாக தமிழில் பகவத் கீதை சொற்பொழிவு!

உலகப் புகழ் பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளரும்,  பக்தி இலக்கியங்களில் ஆழமான ஞானம் உடையவருமான, ஸ்ரீமான் டாக்டர் உ. வே .வெங்கடேஷ் அவர்கள் , 
தமிழில் வழங்கும் பகவத் கீதை சொற்பொழிவு, மும்பை மாநகரில் முதல்முறையாக நடைபெறுகிறது. 

இது குறித்து டாக்டர் உ வே வெங்கடேஷ் கூறும் பொழுது,  ” பகவத் கீதை என்பது வாழ்நாளில் ஒரு முறை மட்டும் வாசித்து விட்டுவிடும் நூல் அல்ல.  வாழ்வின் ஒவ்வொரு நாளும் நமக்கு வழிகாட்டும் பொக்கிஷ நூல் ஆகும். ” என்றார் .  

இப்படிப்பட்ட காலம் கடந்து நிற்கும் அற்புத கருத்துக்களைக்  கூறும் சிறந்த சொற்பொழிவாளர் உலகப் புகழ் பெற்ற டாக்டர் உ வே வெங்கடேஷ் அவர்களின் பகவத் கீதை சொற்பொழிவை கேட்டுப் பயன் பெற உங்கள் அனைவரையும் அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது,  சாஃப்ரான் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். 

பகவத் கீதை சொற்பொழிவைக் கேட்பதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலை இவற்றில் இருந்து விடுபட்டு குடும்பத்திலும் தொழிலிலும் மென்மேலும் உயர்வடையும் வழிகளை அறிந்து கொள்ளலாம். 

இந்த அற்புதமான பகவத் கீதை சொற்பொழிவு மும்பை மாநகரில் முதல்முறையாக,  எதிர்வரும் 2026 ஜனவரி 10ஆம் தேதி,  மாலை ஆறு முப்பது மணிக்கு,  தொடங்குகிறது. சையான்,  ஸ்ரீ சண்முகானந்தா ஹால் வளாகத்தில் உள்ள அசோக் மேத்தா அரங்கில் நடைபெற உள்ளது.  அன்பர்கள் மாலை ஐந்து முப்பது மணிக்கு அவரவர்களுடைய இருக்கையில் வந்து அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments