Thursday, February 5, 2026
HomeUncategorizedதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்வு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்வு..!

தற்போது தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏனென்றால், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நிரம்பி வழிவதால், விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.  

அதிர்ச்சியில் பயணிகள்:

குறிப்பாக சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 6 ஆயிரத்து 500ல் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் கொல்கத்தாவுக்கு செல்ல 22 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூரு செல்ல 6 ஆயிரம் ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோன்று கொச்சி, திருவனந்தபுரம் மதுரை, கோவைக்கு செல்லவும் 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments