Friday, February 20, 2026
HomeUncategorizedநாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

நாட்டுப்புற பாடகி “கலைமாமணி” கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி தனது வயது மூப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 99. சிவகங்கை மாவட்டம் மதுரை- தொண்டியில் கொல்லங்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர் கருப்பாயி. இவர் அகில இந்திய வானொலியில்  30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இவர் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட படங்களிலும் கொல்லங்குடி கருப்பாயி நடித்துள்ளார். இவருக்கு 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதலே வறுமையில் வாடி வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொல்லங்குடி கருப்பாயி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், என் அம்மா அப்பா என்னை படிக்க வைக்கவில்லை. சாணி அள்ளுதல், மாடு மேய்த்தல், ஊர் மந்தையில் விளையாடி பொழுதைக் கழித்தல் உள்ளிட்டவைகளிலேயே என் இளமை காலம் போனது.

 7 வயது முதலே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல எனக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து பாடினேன். எம்ஜிஆர், ராஜீவ் காந்தி காலமான போது நான் மார்பில் அடித்துக் கொண்டு பாடிய பாடலை ஊரே அதிசயமாக கேட்டது என்று பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.கொல்லங்குடி கருப்பாயி தனது வயது மூப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார்.

இவரது மறைவு தகவல் கேட்டவுடன் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments