எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து வழிபாடு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலின் அடிவாரத்தில் சரபேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நள்ளிரவில் பூஜை செய்து தியானத்தில் ஈடுபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகமாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கவும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நள்ளிரவு இங்குள்ள தியான மண்டபத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். பின்பு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார்.

