“புதுக்கோட்டை கம்பன் கழக பொன் பெருவிழாவின்” நான்காம் நாள் (21-07-2025) நிகழ்ச்சியானது , “தமிழ்ச் செம்மல்” ரா.சம்பத்குமார் அரங்கத்தில் (புதுகை நகர்மன்றம்) மாலை 5.30 மணிக்குத் தொடங்கி இரண்டு அமர்வுகளாக நடைபெற்றன.
முதல் அமர்வில் “கவிதைச் சோலை” என்னும் தலைப்பில், தலைமைக் கவிஞராக ரமா ராமநாதன் பொறுப்பேற்க, கவிச்சக்ரவர்த்தி கம்பன் கையாண்ட 50 சொற்களைத் தெரிவுசெய்து, அவற்றின் நயம் , கம்பன் பயன்படுத்தியவிதம் குறித்து ஆளுக்கொரு சொல் எடுத்து, 50 கவிஞர்கள் ரசிக்கத்தக்க வகையில் கவிதையாய்ப் பொழிந்தனர்.
விழாக்குழு உறுப்பினர் கவிஞர் நிலவை பழனியப்பன் வரவேற்புக் கவிதைபாட, கவிஞர். மா.கண்ணதாசன் அமர்விற்கான நன்றிக் கவிதை பாடினார்.
இரண்டாம் அமர்வு “மகளிர் அரங்கம்” என திருமதி.அனுராதா சீனிவாசன் அவர்களின் வரவேற்புரையுடன் மலர்ந்தது.
திரு.மாரிமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி மேனாள் மேயர் “ராணியார்” திருமதி. சாருபாலா ஆர். தொண்டைமான் அவர்கள் தலைமையேற்றுப் பேசினார்.
“மொழியழகி” முனைவர். பர்வீன் சுல்தானா அவர்கள் நடுவராகப் பங்கேற்ற “கம்பன் காட்டும் பெண்கள் பழமையின் வார்ப்புகளா? புதுமையின் ஈர்ப்புகளா? ” என்கிற தலைப்பில், பெண்கள் மட்டுமே பங்கேற்று பேசிய பட்டிமன்றம் நடைபெற்றது.

“பழமையின் வார்ப்புகளே!” என கோவை திருமதி.தனமணி வெங்கட், கல்பாக்கம் கவிஞர். ரேவதி, லால்குடி திருமதி. ஜோதி ரவி ஆகியோரும்,
“புதுமையின் ஈர்ப்புகளே!” என திருவண்ணாமலை முனைவர். எழிலரசி, நாகப்பட்டிணம் திருமதி. வேம்பு பாலா, நாகூர் திருமதி.வருணனி ஆகியோரும் வாதிட்டனர்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள், முனைவர். பர்வீன் சுல்தானா அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்.
நிகழ்ச்சிக்கு திருமதி. மீனாள் முருகப்பன், திரு.அ.ப.ஜெயபால், திரு.எஸ்.இளங்கோ, திரு.கஸ்தூரி ரங்கன், திரு.எஸ்.கே.எம். சரவணன், திரு.ஜி.முருகராஜ், திரு. ஏ.முகமது அப்துல்லா, திருமதி. செல்வி துரைமணி, , திரு.என். முகமது நாசர், திரு. சிவ.திருமேனிநாதன், திரு.எம்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுகை ச.பாரதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, திரு.ஆர். சிவக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
இந்த பத்துநாள் நிகழ்ச்சிகளையும் “தெய்வத் தமிழ் TV ” யூட்யூப் சேனல் நேரலையாக ஒளிபரப்பு செய்துவருவது மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

