Friday, May 22, 2026
Homeசெய்திகள்பிரஸ் பாஸ் மறுப்பிலிருந்து அமைச்சர் பதவி வரை: ஜெகதீஸ்வரியின் வெற்றி பயணம்!

பிரஸ் பாஸ் மறுப்பிலிருந்து அமைச்சர் பதவி வரை: ஜெகதீஸ்வரியின் வெற்றி பயணம்!

தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய அமைச்சரவையில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 40 வயதான கே. ஜெகதீஸ்வரியின் தற்போதைய அரசியல் வருகை, நெட்டிசன்களால் ஒரு “ஸ்வீட் ரிவஞ்ச்” (Sweet Revenge) சக்சஸ் ஸ்டோரியாக இணையத்தில் செம்ம வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த எளிய குடும்பப் பின்னணி கொண்ட ஜெகதீஸ்வரி, ஸ்ரீ ராமலிங்க உயர் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி படித்துவிட்டு, ஒரு பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறியவர்; ஒரு முன்னணி இதழில் தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றிய போதுதான் அந்தச் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

செய்தி சேகரிப்பதற்காகத் தலைமைச் செயலகத்திற்குள் செல்லத் திட்டமிட்ட அவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் அடையாள அட்டைக்கு (Press Pass) விண்ணப்பித்திருந்த சூழலில், அன்றைய அரசின் சில தற்காலிகக் கொள்கை முடிவுகளால் இதழ்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்குப் பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதால், செய்தியாளராகக் கோட்டைக்குள் நுழையும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமலேயே போயுள்ளது.

ஆனால், காலம் செய்த விசித்திரமான அற்புதம் என்னவென்றால், அன்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்ட அதே கோட்டைக்குள், இன்று ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக, முன்பை விட பன்மடங்கு அதிகாரமிக்க கம்பீரமான மாண்புமிகுவாக ஜெகதீஸ்வரி காலடி எடுத்து வைத்திருப்பதுதான், உழைப்பிற்கு மிகச் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments