Wednesday, March 18, 2026
HomeUncategorizedமறைந்தார் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்

மறைந்தார் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் நடிகர் டெல்லி கணேஷ் ஆகஸ்டு 1,1944 நெல்லையில் பிறந்தார். 1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தில் அறிமுகமானார்.

நடிகர் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் தனது யதார்தமான நடிப்பால் மனதில் நின்றார்.

1994ல் கலைமாமணி விருது வென்றார். குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments