Tuesday, March 10, 2026
HomeUncategorizedராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரைக்கப்பட்ட மதுரை அரசமரம் விநாயகர் சிலை.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரைக்கப்பட்ட மதுரை அரசமரம் விநாயகர் சிலை.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசமரம் விநாயகர் கோயிலின் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 5 அடி உயரமும், ஒரு டன் எடையும் கொண்ட எந்தவொரு கலப்படமும் இல்லாமல் முழுவதும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் விஜர்சனம் செய்வதை கடந்த 25 வருடங்களாக வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று அரசமரம் விநாயகர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.

 இதையடுத்து, 26வது முறையாக காலை 10 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள விநாயகர் கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் ராமேஸ்வரம் வந்து முக்கிய பகுதிகளில் வீதி உலா அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments