தமிழ்நாட்டில் தங்கம் விலை தினசரி பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.73,880க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த வாரத்தை பொறுத்தவரை முதல் 2 நாட்கள் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்த நிலையில், ரூ.9,210க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலயில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.73,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை:
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000

