Home Uncategorized உச்சத்தில் தங்கம் விலை- வரலாறு காணாத உயர்வு!

உச்சத்தில் தங்கம் விலை- வரலாறு காணாத உயர்வு!

தங்கம் கிராமுக்கு ரூ.195 அதிகரித்து ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து, ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று   ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்த தங்கம் விலை. 

ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 9,100க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 அதிகரித்து, ரூ.9,295க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து, ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை அதிகரித்து உள்ளது.

13.06.025 – ஒரு சவரன் ரூ.74,360 
12.06.2025 – ஒரு சவரன் ரூ.72,800 
11.06.2025 – ஒரு சவரன் ரூ.72,160

தங்கம் விலையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாதா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. 
 

Exit mobile version