“புதுக்கோட்டை கம்பன் கழக பொன் பெருவிழாவின்” மூன்றாம் நாள் நிகழ்ச்சி (20-07-2025) , “தமிழ்ச் செம்மல்” ரா.சம்பத்குமார் அரங்கத்தில் (புதுகை நகர்மன்றம்) நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதல் அமர்வாக ஹாஜி. என்.சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் “சுழலும் சொல்லரங்கம்” நடைபெற்றது.
மாவட்ட வர்த்தகக்கழகம் துணைச் செயலாளர் திருச.உ.சையது நசீர் வரவேற்புரையும், ஏ.டி.ஆர்.மேல்நிலைப்பள்ளி திரு.த.சரவணக்குமார் வாழ்த்துரையும் வழங்கினர்.
“இராமனின் வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றவர்” என்கிற தலைப்பில் வழக்கறிஞர் “இலக்கியச்சுடர்” திரு. த.இராமலிங்கம் அவர்கள் நடுவராகக் கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, கோவை திரு.க.முருகேசன், கன்னியாகுமரி திரு.சிவ.ஜெயக்குமார், சென்னை திருமதி பத்மா மோகன், குடியேற்றம் திரு.தமிழ் திருமால், தருமபுரி திரு. வ. செளந்தரபாண்டியன், மயிலாடுதுறை முனைவர்.திருமதி. பா. முத்துலெட்சுமி ஆகியோர் உரை வீச்சு நிகழ்த்தினர்.
திரு. கே.எல்.கே.எஸ்.ராஜா முகமது உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். நிறைவில் முனைவர்.லெட்சுமி அண்ணாமலை நன்றியுரை ஆற்றினார்.
இரண்டாம் அமர்விற்கு தமிழக சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மாண்புமிகு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமை வகித்துப் பேசினார்.

திரு. இயல் தமிழ்வேந்தன் வரவேற்புரை வழங்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராசு.கவிதைப்பித்தன் “கவிதை உரை” நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “ராமன் கொண்ட முதல் நட்பும் அதன் சிறப்பும்” என்னும் தலைப்பில் “நற்றமிழ் நாயகர்” டாக்டர்.ஜெய ராஜமூர்த்தி அவர்கள் எழிலுரை நிகழ்த்தினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வை.முத்துராஜா, திரு.எம்.சின்னதுரை, திரு.கே.பி.கே தங்கமணி, திரு.தென்னலூர் பழனியப்பன், திரு.த.சந்திரசேகரன், திரு.க.நைனா முகமது, திரு. என்.சாத்தையா, திரு. அரு.வடிவேலு, திரு.எம்.எம்.பாலு, திரு.ராசு.க.சந்தோஷ், திரு.சா.மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
நிகழ்ச்சியை புதுகை ச. பாரதி தொகுத்து வழங்க, ஒப்பந்தக்காரர் திரு. ராம. நாராயணசாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

