Home டிஜிட்டல் Google Pay-ல் வரும் Pocket Money-யால் குழப்பமா? அவங்களே கொடுத்த விளக்கம்!

Google Pay-ல் வரும் Pocket Money-யால் குழப்பமா? அவங்களே கொடுத்த விளக்கம்!

Google Pay-ல் கடந்த 2025 ஆம் ஆண்டு வந்த புதிய அம்சம் தான் ‘Pocket Money’. பெற்றோர்கள் (Primary User) தங்கள் குழந்தைகளுக்கு/மற்றவர்களுக்கு (Secondary User) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அணுக அனுமதிக்கும் ஒரு அம்சம் என இது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் குழந்தைகள் (மற்றவர்கள்) Payment request அனுப்பியதும், Parent approve செய்த பிறகே பணம் செலுத்தப்படும். மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று limit fix (15,000 ரூபாய் வரை) செய்யும் வசதியும் உள்ளது.

இதில் Secondary user-க்கு என்று சொந்தமாக வங்கி கணக்கு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இது பாதுகாப்பானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் Secondary users, தங்களது தொலைபேசி எண்ணைக் கொண்டு கூகுள் பே செயலியைப் பதிவு செய்து, UPI ஐடி அல்லது UPI சர்க்கிள் க்யூஆர் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் Payment History-ல் உள்ள “Pocket Money” Feature-ஐ தொட்டதுமே பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படுவதாகக் கூறி பலரும் வாட்சாப் ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

https://support.google.com/pay/india/#topic=10094979

Exit mobile version