இது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாக LASER என்று அழைக்கப்படுகின்றது. கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி என்பதே இதன் பொருள். எனவே இது ஓர் ஒளிமிகைப்பிக் கருவி. அலைநீளங்களும் அலைமுகங்களும் சீரொற்றுமை பெற்று பேரொளியாக வெளிப்படும் ஒளி.
அதற்கு முன்னரே லேசர் குறித்த ஆராய்ச்சிகளை பலர் செய்து வந்திருந்த போதிலும் அதனை முற்றிலும் அறிவியல் துறையில் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உருவாக்கி அளித்தது இந்நாளில்தான் .
மருத்துவத்துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் லேசர் பயன்பாடு புரட்சி செய்து வருகிறது.
