Thursday, February 5, 2026
Homeசெய்திகள்எல்இடி விளக்கு தயாரிப்புக்கு அரசு மானியம்!

எல்இடி விளக்கு தயாரிப்புக்கு அரசு மானியம்!

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை பெருக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏசி, எந்திரங்கள், எல்இடி விளக்குகள் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கான மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

 வீட்டில் பயன்படுத்தப்படும் இந்த வெள்ளை பொருட்களுக்கான உற்பத்திக்கு மானியம் வழங்க மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் விண்ணப்ப பதிவு தளத்தை (ஆன்லைன் போர்டல்) உருவாக்கியுள்ளது.

 இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் இந்த தளத்தை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அரசு சார்பில் ரூ.6.283 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments