Tuesday, March 17, 2026
Homeஆன்மீகம்ஸ்ரீ விக்னவிமோச்சக அனுமன் திருவுருவச் சிலைக்கு 'திவ்ய பிராண பிரதிஷ்டை மகா உற்சவம்' கோலாகலம்!

ஸ்ரீ விக்னவிமோச்சக அனுமன் திருவுருவச் சிலைக்கு ‘திவ்ய பிராண பிரதிஷ்டை மகா உற்சவம்’ கோலாகலம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ‘சமத்துவச் சிலைக்கு’ (Statue of Equality) அருகில், ஸ்ரீ விக்னவிமோச்சக அனுமன் திருவுருவச் சிலைக்கு ‘திவ்ய பிராண பிரதிஷ்டை மகா உற்சவம்’ மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

முக்திநாத் பீடாதிபதி மற்றும் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர்.

சுமார் 216 அடி உயரமுள்ள ராமானுஜர் சிலைக்கு அருகே அமைய பெற்றுள்ள இந்த அனுமன் சிலை, பக்தர்களின் தடைகளை நீக்கும் வல்லமை கொண்டதாகக் கருதப்படுவதால் ‘விக்னவிமோச்சகர்’ என அழைக்கப்படுகிறது.

வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் நடைபெற்ற இந்தப் பிரதிஷ்டை விழாவையொட்டி, சிறப்பு ஹோமங்கள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் முச்சிந்தல் பகுதியில், இந்த அனுமன் பிரதிஷ்டை புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments