Friday, June 26, 2026
Homeசினிமா'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது.

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின் ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், “‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் திருப்திகரமான தருணமாகும். இந்தக் கதையை ஆரம்பம் முதலே நம்பி, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நம்பிக்கையால்தான் நாங்கள் நினைத்தபடியே இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது. ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஹைக்கூ’ திரைப்படம் ரசிகர்களுக்கு மனதை வருடும், இதமான, தென்றல் போல இலகுவான, உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. அதை விரைவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு இயக்குநரின் கனவுகளை நனவாக்க தயாரிப்பாளரின் ஆதரவு மிக அவசியம். அந்த வகையில், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட எனது தயாரிப்பாளர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். எதிர்காலத்தில் பல இளம் இயக்குநர்களுக்கு விஷன் சினிமா ஹவுஸ் வாய்ப்பளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ திரைப்படம் முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆரம்பம் முதலே இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தப் படத்தை மிகத் தெளிவான பார்வையுடனும் நேர்மையான அணுகுமுறையுடனும் உருவாக்கினார். அவர் மீது முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பிலும் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது அருமையான அனுபவம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தவுடன் இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம். தரமான படைப்பும், திட்டமிட்ட நேரத்தில் அதை நிறைவு செய்வதும்தான் தயாரிப்பாளருக்கு உண்மையான மகிழ்ச்சி. இதனை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி சரியாக செய்து முடித்தார். இயக்குநராக அவருக்கு எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றனர்.

படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே ‘ஹைக்கூ’ திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தற்போது டிஜிட்டல் உரிமைகள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சூழலில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது இப்படத்தின் கதை மீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் இணைக்கும் பொதுவான இந்த கதை, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடிகர்கள்: ஏகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, ‘மெய்யழகன்’ புகழ் இந்துமதி, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன், ‘சிறை’ புகழ் இஸ்மத்தா பானு, ‘டாக்டர்’ சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: யுவராஜ் சின்னசாமி,
கூடுதல் திரைக்கதை: ஹரி ஹரன் ராம்,
ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி,
படத்தொகுப்பு: சக்தி பிரணேஷ்,
இசை: சித்து குமார்,
கலை இயக்கம்: பிரேம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments