Home சினிமா He-Man பொம்மை வடிவமைப்பாளர் ரோஜர் ஸ்வீட் வயது மூப்பு மற்றும் டிமென்ஷியா பாதிப்பு காரணமாக காலமானார்!

He-Man பொம்மை வடிவமைப்பாளர் ரோஜர் ஸ்வீட் வயது மூப்பு மற்றும் டிமென்ஷியா பாதிப்பு காரணமாக காலமானார்!

1980-களில் உலகெங்கும் உள்ள குழந்தைகளைக் கவர்ந்த ‘ஹீ-மேன்’ (He-Man) கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரபல பொம்மை வடிவமைப்பாளர் ரோஜர் ஸ்வீட் (91) வயது மூப்பு மற்றும் டிமென்ஷியா பாதிப்பு காரணமாக காலமானார்.

அமெரிக்காவின் ‘மேட்டல்’ நிறுவனத்தில் முன்னணி வடிவமைப்பாளராகப் பணியாற்றிய இவர், ஸ்டார் வார்ஸ் பொம்மைகளுக்குப் போட்டியாக 1982-ல் ‘மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற பெயரில் அதீத தசை வலிமை கொண்ட ‘ஹீ-மேன்’ உருவத்தை வடிவமைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

பல ஆண்டுகளாக மறதி நோயுடன் போராடி வந்த இவருக்குச் சிகிச்சை அளிக்க ரசிகர்கள் நிதி திரட்டி உதவி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அமைதியாக உயிர் பிரிந்ததாக அவரது மனைவி மார்லின் தெரிவித்துள்ளார்.

இவரது கைவண்ணத்தில் உருவான ‘I have the power’ என்ற வசனமும், அந்த வீரக் கதாபாத்திரமும் இன்று வரை பாப் கலாச்சாரத்தின் நீங்காத அடையாளமாகத் திகழ்வதுடன், அவரது மறைவு உலகெங்கும் உள்ள அனிமேஷன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version