Thursday, February 5, 2026
HomeUncategorizedவாரம் ஒரு முறை வேப்பம்பூ.. அப்புறம் மேஜிக் பாருங்க! அசந்துடுவீங்க!

வாரம் ஒரு முறை வேப்பம்பூ.. அப்புறம் மேஜிக் பாருங்க! அசந்துடுவீங்க!

வெயில் காலங்களில் மட்டுமே கிடைக்கும் வேப்பம்பூ, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நம் முன்னோர்கள் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேகரித்து, பாதுகாத்து வைத்து, வருடம் முழுவதும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அதன் படி, இன்று நாம் வேப்பம்பூவை பற்றி காண்போம்.

வேப்பம்பூவின் மருத்துவ பயன்கள்:

வேப்பம்பூவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்க்கும்போது, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வயிற்று உப்பசம், புளித்த ஏப்பம், வயிறு கோளாறு, பித்த வாந்தி, அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இது மிக சிறந்த மருந்தாகும்.

இது கல்லீரலை வலுப்படுத்தி, திறனாற்றலை அதிகரிக்கும். நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வேப்பம்பூவை உணவில் சேர்த்தால், அவர்களின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி நன்கு பொடியாக்கி வைக்கவும். அரை ஸ்பூன் வேப்பம்பூ பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடிப்பது அஜீரணம், வயிற்று உப்புசம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். வேப்பம்பூவை பச்சையாக அரைத்து அல்லது பொடியாக்கி தேனில் கலந்து குழந்தைகளுக்கு மாதம் ஒருமுறை கொடுக்க வயிற்று பூச்சிகள் வெளியேறி ஆரோக்கியமாக வளர்வார்கள்.

வேப்பம்பூ கஷாயம்

வேப்பம்பூவை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆகும்வரை காய்ச்சி, வடிகட்டி குடிப்பது உடல் ஆரோக்கியம் பெற உதவும், செரிமான பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோய் குறையும், தலைமுடி ஆரோக்கியமாக வளரும், சரும பிரச்சனைகள் நீங்கும்.

வேப்பம்பூவில் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம் உள்ளன, இதன் பைட்டோ கெமிக்கல்கள் உடல் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமாக வாழலாம்.

உணவில் வேப்பம்பூ 

வேப்பம்பூவை எண்ணெயில் வெங்காயம் சேர்த்து வதக்கி, ரசத்துடன் கலந்து உணவில் சேர்ப்பது முழு பலனை தரும். உலர்ந்த வேப்பம்பூ பொடியை பருப்பு பொடியில் கலந்து உணவில் சேர்ப்பது நல்லது. வேப்பம்பூவை நன்றாக கழுவி, சின்ன வெங்காயம், புளி, உளுத்தம் பருப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து உண்ண உடல் ஆரோக்கியம் பெறலாம். வேப்பம்பூவின் மருத்துவ குணங்களை உணர்ந்து, வாரம் இருமுறை உணவில் சேர்ப்பது பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments