Friday, May 22, 2026
Homeசெய்திகள்மூவண்ணக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் பறக்கவிட்ட இந்திய பெண்கள்!

மூவண்ணக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் பறக்கவிட்ட இந்திய பெண்கள்!

இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் மத்திய ஆயுதக் காவல் படைகளான (CAPF) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆகியவற்றைச் சேர்ந்த வீராங்கனைகள், நேற்றைய தினம் (மே 21, 2026) ஒரே நேரத்தில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட இந்த இரு தனித்தனி குழுக்களில், ஐடிபிபி (ITBP) படையைச் சேர்ந்த 11 வீராங்கனைகளும், பிஎஸ்எஃப் (BSF) படையைச் சேர்ந்த 4 வீராங்கனைகளும் தங்களின் அசாத்திய துணிச்சலாலும், இமயமலைப் பகுதியின் கடுமையான சவால்களை எதிர்கொண்டும் இந்த இமாலய சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பெண் காவலர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு மூவண்ணக் கொடியைப் பறக்கவ…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments