Home Uncategorized உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

உடல்  பருமனால் அவதிப்படுபவர்கள் அன்றாட உணவில் முறையான, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. பல வகையான உடல் பயிற்சியும், உணவு முறையில்  மாற்றங்கள் கொண்டு வந்தாலும் உடல்குறைவதில் சில குறைபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் இந்த பதில் உள்ளது.

எளிதில் உடலை குறைக்க  நல்ல சத்துக்கள் நிறைந்த சில உணவுகளை நாம் முறையாக பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றங்களை காணலாம். அப்படி உடலைக் குறைக்க பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான உணவு தான் கொண்டைக்கடலை.
 

கருப்பு கொண்ட கடலையின் சத்துக்கள்

 கொண்டைக்கடலையில் நிறைய நார்ச்சத்து உள்ளது. உடலை குறைக்க நினைப்பவர்களுக்கு பசியை தூண்டாமல் வயிறை  திருப்தியாக வைத்திருக்கும். இதில் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளதால் உயிர் அழுத்தத்தை குறைக்கும் இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை சீராக வைத்து பாதுகாக்கும்.

பெல்லி ஃபேட் என்று சொல்லக்கூடிய அடிவயிற்று தொப்பையை குறைக்க கொண்டைக்கடலையை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக உடலில் நல்ல மாற்றம் ஏற்படும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொண்டைக்கடலையை மாலையில் ஸ்நேக்ஸ் ஆக எடுத்துக் கொண்டால் அவர் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து நோய் அறிகுறி பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ள கருப்பு கொண்டை கடலையை நாம் உணவில் பயன்படுத்தும் பொழுது சரும நோய்களும் கை கால் நகங்களில் வரும் கிருமி தொற்று நோய்களும் குணமாகும். தலைமுடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக முடி வளரும்.
 

Exit mobile version