Friday, February 6, 2026
HomeUncategorizedடயட்ல இருக்கீங்களா? ஓட்ஸை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! எடை சும்மா சர்ருன்னு...

டயட்ல இருக்கீங்களா? ஓட்ஸை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! எடை சும்மா சர்ருன்னு குறையும்!

 உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான டயட்டுகளை ஃபாலோ செய்து வருகின்றனர். அதிலும் சிலர் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த ஓட்ஸை டேஸ்டியாகவும், ஹெல்தியாகவும் எப்படி செய்யலாம் என்பதை  இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன் * கறிவேப்பிலை – 1 கொத்து

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* கேரட் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/2 கப்

* ஓட்ஸ் – 2 கப்

* தண்ணீர் – 2 கப்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, வதக்க வேண்டும்.

*பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1/2 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்தவுடன் , அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அதில் ஓட்ஸை சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.

* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெஜ் மசாலா ஓட்ஸ் தயார்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments