குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தோக்லா.. எப்படி செய்யலாம்னு பாக்கலாமா?
குழந்தைகள் மாலையில் வீடு திரும்பும்போது சாப்பிட என்ன கொடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? எப்போதும் போல பஜ்ஜி பஞ்ச செய்யாமல் வித்யாசமாக இந்த நார்த் இந்தியன் டிஷ் தோக்லாவை ட்ரை செய்து பாருங்கள். நார்த் இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே அதிகமாக கிடைக்கும் இந்த தோக்லாவை வீட்டிலும் ஈசியாக செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் படிப்படியான விளக்கமும்
இதோ:
தேவையான பொருட்கள்:
தோக்லா மாவு தயாரிக்க:
கடலை மாவு - 1.5 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - ½ கப் (புளிப்பு இல்லாதது) அல்லது தண்ணீர் (தோராயமாக 1 கப்)
இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15
பச்சை மிளகாய் - 4, கீறியது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ¼ கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ¼ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
அலங்காரத்திற்கு:
புதிதாக துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கியது
செய்முறை:
முதலில் மாவைத் தயாரிக்கவும்: கடலை மாவு, ரவை (பயன்படுத்தினால்), தயிர் அல்லது தண்ணீர், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி, 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, தண்ணீரை ஸ்டீமரில் கொதிக்க விடவும்.
மாவை புளிக்க வைக்கவும்: வேகவைப்பதற்கு முன், பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீருடன் சேர்த்து, நுரை வரும் வரை மெதுவாகக் கிளறவும்.
தோக்லாவை வேகவைக்கவும்: மாவை எண்ணெய் தடவிய டப்பாவில் ஊற்றி, 15-20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்த பிறகு சிறிது ஆற விடவும்.
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, மற்றும் தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
பரிமாறவும்: தோக்லாவை துண்டுகளாக வெட்டி, அதன் மேல் தாளிப்பை ஊற்றி, தேங்காய் மற்றும் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
பிறகு பரிமாறவும்.
சுவையான தோக்லா ரெடி!.