Saturday, March 21, 2026
HomeUncategorizedசிக்கன் வாங்குனா நெஸ்ட் டைம் இப்படி "மிளகு கோழி வறுவல்" செஞ்சி பாருங்க! டேஸ்ட் அள்ளும்!

சிக்கன் வாங்குனா நெஸ்ட் டைம் இப்படி “மிளகு கோழி வறுவல்” செஞ்சி பாருங்க! டேஸ்ட் அள்ளும்!

வீட்டில் சிக்கன் வாங்குனா எப்பவுமே கிரேவி, பிரியாணி செஞ்சு போர் அடிக்குதா? அப்போ இந்த மாதிரி மிளகு கோழி வறுவல் செஞ்சு குடுங்க. சளி, இருமல், காய்ச்சல் எது இருந்தாலும் பறந்து போய்டும். அது மட்டும் இல்ல பிரியாணியை விட இது ஈஸியான ரெசிபி எப்படி செய்யலாம்? பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன் 
  • சோம்பு – 1/2 டீஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி – 1 இன்ச் (துருவியது) 
  • கறிவேப்பிலை – 1 கொத்து 
  • சிக்கன் – 1/2 கிலோ 
  • மஞ்சள் தூள் – சிறிது 
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் 
  • மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • கொத்தமல்லி – சிறிது
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  •  உப்பு – 3/4 டீஸ்பூன் 

செய்முறை:

  • சிக்கனை மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து பிரட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்  .
  • பிறகு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 5 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்கவும்  
  • அதன் பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்(இஞ்சி பூண்டு விழுதாகவும் சேர்க்கலாம்). 
  • பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும். 
  • அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 
  • பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பிறகு தக்காளியை சேர்த்து நன்குவதக்கவும்.
  • பின் அதில் கொத்தமல்லி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். 
  • அடுத்து சுவைக்கேற்ப உப்பு , 1/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான  மிளகு கோழி வறுவல் ரெடி. இதனை அப்படியே சுடுசாதத்துடன் சாப்பிடலாம். இல்லையென்றால், கிள்ளிப்போட்ட சாம்பார், ரசம் சாப்பிடும் போது சைட்  டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்.  
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments