Home Uncategorized காரசாரமான இறால் கிரேவி எப்படி செய்யலன்னு பாக்கலாமா?

காரசாரமான இறால் கிரேவி எப்படி செய்யலன்னு பாக்கலாமா?

காரசாரமான இறால்  கிரேவி எப்படி செய்யலன்னு பாக்கலாமா?

இறால்  கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • இறால் – 500 கிராம் (சுத்தம் செய்தது)
  • சின்ன வெங்காயம் – 150 கிராம் (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (உங்கள் காரத்திற்கேற்ப)
  • தனியா தூள் – 2 தேக்கரண்டி
  • சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது) 

 

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. மசாலாவின் பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்த இறாலை சேர்த்து கிளறவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி போட்டு 5-7 நிமிடங்கள் வேக விடவும்.
  8. இறால் வெந்ததும் கரம் மசாலாவை சேர்த்து கிளறவும்.
  9. கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். 
Exit mobile version