பிள்ளையார்பட்டி மோதகம்.. எப்படி செய்யலானு பாக்கலாமா?
மோதகம் செய்ய தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
1/2 கப் பாசிப்பருப்பு
3 ஏலக்காய்
1.5கப் வெல்லம்
1/4 கப் தேங்காய் துருவல்
1சிட்டிகை உப்பு
தேவையான அளவு நெய்
மோதகம் செய்முறை:
*ஒரு கப் பச்சரிசியை நன்றாக கழுவி ஆறவைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
*பிறகு 1/2 கப் பாசிப்பருப்பு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
*இரண்டும் ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து மூன்று ஏலக்காயும் போட்டு. ரவை போல் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
*ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பொடித்து வைத்துள்ள பச்சரிசி சிறுபருப்பு கலவையை அதில் போட்டு வறுக்கவும்.
*பிறகு மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
*பாகு தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் 1.5கப் வெல்லம் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறினால் பாகு ரெடி.
*வேக வைத்த அரிசி கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
*அரிசி கலவை பாகு இரண்டும் ஒன்று சேர்ந்து கெட்டியாகும் வரை கிளறி விடவும், பிறகு தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கிளறி கொள்ளவும்.
*கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு பிறகு அச்சில் அந்த கலவையை சேர்த்து எடுத்தால் மோதகம் தயார்.