Tuesday, March 24, 2026
HomeUncategorizedஈசியா பிரியாணி செய்யணுமா? இந்தாங்க step by step process! செஞ்சி அசத்துங்க!

ஈசியா பிரியாணி செய்யணுமா? இந்தாங்க step by step process! செஞ்சி அசத்துங்க!

சில பேருக்கு பிரியாணி செய்வது கைவந்த கலையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ எப்படி செய்தாலும் அரிசி குழைந்து விடும் அல்லது ஏதாவது ஒரு கோளாறில் சிக்கிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஈஸியான ஸ்டெப் பை ஸ்டெப் பிரியாணி செய்முறை கொடுத்துள்ளோம். இப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வீட்ல எல்லாரும் அசந்து போயிருவாங்க. ஸ்டார்ட் பண்ணலாமா!

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1 கிலோ
  • பாசுமதி அரிசி – 1 கிலோ
  • வெங்காயம் – 3 பெரியது(நறுக்கியது)
  • தக்காளி – 3 நறுக்கியது 
  • பச்சை மிளகாய் – 4-5
  • இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மல்லி தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • தயிர் – 1/2 கப்
  • கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

 மசாலா தயார் செய்தல்:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
  • மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நறுக்கிய சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தயிர் சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மல்லி, புதினா இலைகளை சேர்த்து கிளறவும்.

 அரிசியை தயார் செய்தல்:

  • அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்னர், மசாலாவுடன் அரிசியை சேர்த்து கிளறவும்.
  • 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றி, உப்பு சரிபார்த்து கிளறவும்.
  • குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  • ஆவி அடங்கியதும், கிளறி, மேலே மல்லி, புதினா தூவி, சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

  • சிக்கனுக்கு பதிலாக மட்டன் அல்லது காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
  • பிரியாணியை தம் போட்டும் செய்யலாம்.
  • பிரியாணியுடன் வெங்காய பச்சடி, தயிர் பச்சடி அல்லது ராய்த்தா சேர்த்து பரிமாறவும். 
     
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments