Skip to main content

விநாயகரே அசந்து போற அளவுக்கு கொழுக்கட்டை செய்யணுமா? இந்த மாதிரி ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. பஞ்சு போல இருக்கும் !

விநாயகர் சதுர்த்தி வரப்போகுது, எத்தனை முறை கொழுக்கட்டை செஞ்சாலும் சரியாவே வரலையா? அப்போ இந்த மாதிரி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க.. சும்மா வாயில வச்சாலே கரையிற அளவுக்கு சாப்டா டேஸ்டியான கொழுக்கட்டை கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

உக்கரை நிரப்புவதற்கு:
1/4 கப் பாசிப்பருப்பு
1 கப் தண்ணீர்
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 டேபிள்ஸ்பூன் ரவை
1/4 கப் தேங்காய்
1 கப் வெல்லம் (150 கிராம்) கூடுதல் இனிப்புக்கு 200 கிராம்
சிட்டிகை ஏலக்காய் தூள்
1-2 டேபிள்ஸ்பூன் நெய்

வெளிப்புற மாவிற்கு
1 கப் அரிசி மாவு (இடியாப்பம் மாவு)
1/4 டேபிள்ஸ்பூன் உப்பு
1-2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
கொதிக்கும் நீர்

kozhukatai

செய்முறை: 

*ஒரு கப் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.

*விசில் அடங்கியதும் பாசிப்பருப்பு மசித்து எடுத்துக் கொள்ளவும். 

 *கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவும். அதில், இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

 *ரவை பொன்னிறமாக மாறியவுடன் 1/4 கப் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக கிளறி விடவும்.

 *பிறகு ஏற்கனவே வேக வைத்து மசித்து வைத்த பாசிப்பருப்பு கலவையை அதில் போடவும்.

 *மீண்டும் நன்றாக கலந்து விடவும், பிறகு 150 கிராம் (ஒரு கப் அளவு) வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும். 

* இனிப்பு அதிகமாக தேவைப்பட்டால் 50 கிராம் நாட்டு சக்கரை அல்லது வெல்லம் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். 

 *கொஞ்சம் கெட்டியாக வரும் வரை கிளறி விட்டு, பிறகு ஏலக்காய் பொடித்து சேர்த்துக் கொள்ளவும். 

 *பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும் (நெய் சேர்த்தால் கூடுதல் வாசமாகவும் சாப்டாகவும் இருக்கும்). 

 *பிறகு வேக வைத்த கலவை எடுத்து ஆற வைக்கவும்.

kozhukatai

 இப்போது கொழுக்கட்டை வெளி மாவு  செய்முறை

 *ஒரு கப் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு, ரெண்டு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 

*அதில் கொதிக்க வைத்த தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சாஃப்ட்டாக மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

*இப்போது மாவில் இருந்து சிறிய துண்டு எடுத்து தட்டையாக கையில் தட்டிக் கொள்ளவும். பிறகு ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பூரணத்தை அதனுள் வைத்து மாவை மடித்து ஓரங்களில் நன்றாக அழுத்திக் கொள்ளவும் (பூரணம் வெளியே வராமல் இருக்க).

*இப்போது அச்சில் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்றால் கொழுக்கட்டை மாவு கொஞ்சம் எடுத்து உருண்டை பிடித்து அச்சுக்குள் போட்டு ஓரங்களில் அழுத்தி விடவும், நடுவே பூரணம் வைத்து பிறகு அதன் மேல் மாவை வைத்து மூடிக்கொள்ளவும். இப்போது அச்சை திறந்து பார்த்தால் அந்த அச்சு போலவே கொழுக்கட்டை கிடைக்கும்.

*அதேபோல் அனைத்து மாவையும் தயார் செய்து எடுத்து, ஆவியில் 10 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சாப்டான, டேஸ்டியான   கொழுக்கட்டை தயார்.