Home Uncategorized காய்கறிகளை பார்த்தாலே குழந்தைங்க ஓடி போறாங்களா? அப்போ இந்த ரெஸிபி உங்களுக்கு தான்!

காய்கறிகளை பார்த்தாலே குழந்தைங்க ஓடி போறாங்களா? அப்போ இந்த ரெஸிபி உங்களுக்கு தான்!

சில குழந்தைகளுக்கு காய்கறிகளை பார்த்தாலே பிடிக்காது. அவர்களை காய்கறி சாப்பிட வைப்பதற்குள் பல மணி நேரம் ஆகிவிடும். அதுவும் பள்ளிகளுக்கு பொறியியல் போன்றவை கொடுத்து அனுப்பினால் மறுபடியும் அப்படியே வீட்டுக்கு திரும்பி வரும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் ரெசிபி தான் வெஜிடபிள் பேன் கேக். இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

வெஜிடபிள் பேன் கேக் செய்ய தேவையான பொருட்கள்: – கோதுமை மாவு – ½ கப் – பொட்டுக்கடலை – ½ கப் – முட்டைகோஸ் – 1 கப் – கேரட் – 2 – வெங்காயம் – 1 – பச்சை மிளகாய் – 3 – பூண்டு – 5 பல் – மிளகு தூள் – 1 டீ ஸ்பூன் – சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன் – மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன் – உப்பு – தேவையான அளவு – கொத்தமல்லி – சிறிதளவு – எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை:
 

  • வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். 
  • அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ், மற்றும் பூண்டை போட்டு நன்கு கிளறி விட்டு வேக விடவும். 
  • அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், மற்றும் சீரகத்தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின் அதில் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும். 
  • பின் அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும். – அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து கொள்ளவும்.
  • அதனுடன் கோதுமை மாவு மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை போட்டு நன்கு கிளறவும். 
  • பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து மாவை தட்டும் பதத்திற்கு கொண்டு வரவும். 
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். 
  • எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு எடுத்து தட்டை வடிவத்திற்கு தட்டி கொள்ளவும்.
  • பின் அதை தோசை கல்லில் சேர்த்து இரு புறமும் நன்கு பொன் நிறமாக மாறும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் பேன் கேக் ரெடி!
     

 

 

Exit mobile version