Thursday, March 12, 2026
Homeசெய்திகள்பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் எரிபொருளை நிரப்பிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சில இடங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படும் வதந்திகளால் மக்கள் பதற்றமடைந்துள்ள நிலையில், தட்டுப்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியல் சூழலால் எரிபொருள் விலையேற்றம் அல்லது தட்டுப்பாடு வரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தற்காலிகமாக ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments