Thursday, February 5, 2026
HomeUncategorizedமூச்சு இருக்கும் வரை நானே தலைவர்- ஒரே போடு போட்ட ராமதாஸ்!

மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்- ஒரே போடு போட்ட ராமதாஸ்!

பாமக நிறுவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், பாமகவில் நிலவி வரும் பிரச்சனை அந்த கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் ராமதாஸ் தனது 60வது திருமண நாள் விழாவில் கூட அன்புமணி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, 

எனது நண்பர் கலைஞர் பாணி..மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்.

எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.

என்னால் தொடங்கப்பட்ட பாமகவை வளர்த்தது நான் தான்.

மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்.

அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவு வரும்.

அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை இல்லை.

நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும்.

என்று பேசி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments