Friday, March 13, 2026
Homeஉலகம்UAE போர் எதிரொலி: பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்து உத்தரவு!

UAE போர் எதிரொலி: பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்து உத்தரவு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான ICSE (பத்தாம் வகுப்பு) மற்றும் ISC (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்துள்ளது.

அங்குள்ள மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ‘மாற்று மதிப்பீட்டு முறை’ (Alternative Assessment) மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாணவர்களின் முந்தைய உள்மதிப்பீட்டுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் கணக்கிடப்படும்.

இந்த திடீர் அறிவிப்பால் அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், மறுபுறம் உயர்கல்வி சேர்க்கை குறித்த கவலையிலும் உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments