கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் நமது கலாசார உணவினை பிரபலப்படுத்துகிறது.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான, வேகவைத்த தென்னிந்தியாவின் உணவான இட்லியை கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டு இருக்கிறது கூகுள். அந்த அனிமேஷனில் ‘கூகிள்’ என்ற வார்த்தை இட்லி, சாம்பார் மற்றும் சட்னியைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு இருக்கிறது.

