Thursday, March 19, 2026
HomeUncategorizedஇன்றைய திருவெம்பாவை பகுதி - 13

இன்றைய திருவெம்பாவை பகுதி – 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம் :
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன அவை அன்னை பார்வதியைப் போல உள்ளன. அதில் பூத்துள்ள செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் செந்நிற மேனியை நினைவுபடுத்துகின்றன. இங்கே பறவைகளினால் பல தரப்பட்ட ஒலி உண்டாகிறது. உடலில் உள்ள அழுக்கைப் போக்க பலர் நீராட வருகிறார்கள். ஆகவே இந்தப் பொய்கை எமது இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து அனைவரும் நீராடுவோம் என்று அழைக்கின்றனர் பெண்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments