இந்தியாவில் உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது சுயாதீன வளாகங்களை அமைப்பதற்காக 14 புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு விருப்பக் கடிதங்களை (Letters of Intent – LoIs) வழங்கி முறைப்படி அனுமதி அளித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின்படி பிரிட்டனைச் சேர்ந்த சவுத்தாம்ப்டன், குயின்ஸ் பெல்ஃபாஸ்ட், லிவர்பூல், யார்க், பிரிஸ்டல், அபர்தீன், கோவென்ட்ரி, சர்ரே ஆகிய பல்கலைக்கழகங்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீக்கின், வொல்லாங்கொங், வெஸ்டர்ன் சிட்னி, விக்டோரியா, லா ட்ரோப் ஆகிய பல்கலைக்கழகங்களும், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகமும் இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்கவுள்ளன.
இதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே இருந்துகொண்டே சர்வதேசத் தரம் வாய்ந்த உயர்கல்வியைப் பெற முடியும் என்பதுடன், உலகளாவிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பும் பெருகும்.
நாட்டின் கல்வி உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்த உலகளாவிய கூட்டு முயற்சி, இந்தியாவின் கல்விச் சந்தையை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
