Home உலகம் தனிமையை விரும்பும் இந்தியர்கள்? அதிர்ச்சி தரும் ஆய்வுகள்!

தனிமையை விரும்பும் இந்தியர்கள்? அதிர்ச்சி தரும் ஆய்வுகள்!

தனிமையில் தவிக்கும் இந்தியா! Connected Online, Isolated in Real Life!

உலக அளவில் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அண்மைய உலகளாவிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதத்தினர் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தீவிரமான தனிமை உணர்வையும் (Loneliness), மற்றவர்களிடமிருந்து தனித்துவிடப்பட்ட மனநிலையையும் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைத்தளங்களின் அதீதப் பயன்பாடு மற்றும் நகர்ப்புற கலாச்சாரத்தின் காரணமாக மனிதர்களுக்கு இடையேயான நேரடி சமூகத் தொடர்புகளும், குடும்பப் பிணைப்புகளும் பெருமளவில் குறைந்து போனதே இந்த அபாயகரமான நிலைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மன அழுத்தத்தையும், மனநலப் பாதிப்புகளையும் சத்தமில்லாமல் அதிகரிக்கும் இந்தத் தனிமை உணர்வு, இளம் தலைமுறையினர் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் ஆட்கொண்டு வருவது ஒரு தீவிரமான சமூக மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Exit mobile version