இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இவர்களது ஏழு ஆண்டு திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளியென பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்திருந்தார். இதற்கிடையே சாய்னா நேவாலுக்கு முன்னாள் பேட்மிட்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், ஏழு ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக சாய்னா பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள அறிக்கையில்,இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக பதிவிட்டுள்ளார். இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

