இன்ஸ்டாகிராம் தளம் ‘இன்ஸ்டன்ட்ஸ்’ (Instants) என்ற புதிய புகைப்படப் பகிர்வு வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் பீரியல் (BeReal) செயலிகளுக்குப் போட்டியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வசதி மூலம், பயனர்கள் எடிட்டிங் செய்யப்படாத நேரடிப் புகைப்படங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தப் புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்பதோடு, பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தானாகவே மறைந்துவிடும்.
தற்போது ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மட்டும் சோதனைக் கட்டத்தில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சம், விரைவில் உலகளாவிய பயனர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலரியில் இருக்கும் படங்களை இதில் பயன்படுத்த முடியாது என்பதால், பயனர்கள் தங்களின் எதார்த்தமான தருணங்களை மட்டுமே இதில் பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

