Wednesday, March 11, 2026
HomeUncategorizedஇரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது- எலான்மஸ்க்

இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது- எலான்மஸ்க்

என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது” என, டெஸ்லா உரிமையாளரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. காதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு விடுத்த கோரிக்கையில், ‛‛தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள்.

டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர்” எனக் கூறியிருந்தார். இதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில், ஆபத்தான நேரத்தை கடந்துள்ளேன்.

கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர்.

டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments