ISKCON ஒரு அடிப்படைவாத அமைப்பு, அதை தடை செய்யும் செயல்முறைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என வங்கதேச அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்
ISKCON தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வங்கதேச அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
சின்மோய் கிருஷ்ண தாஸின் கைதை கண்டித்து வங்கதேசத்தில் டாக்கா, சட்டோகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது
இந்திய வெளியுறவுத் துறையும் கிருஷ்ண தாஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன

