Thursday, February 5, 2026
HomeUncategorizedஇஸ்ரேல் ஈரான் போர்.. 3வது நாளாக தொடரும் தாக்குதல்.. 13 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் ஈரான் போர்.. 3வது நாளாக தொடரும் தாக்குதல்.. 13 பேர் உயிரிழப்பு!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் பிரிகேடியர் முகமது காசெமி மற்றும் அவரது துணை ஜெனரல் ஹசன் மொஹாகிக் ஆகியோர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்திற்குள் ஈரான் ஏவிய சுமார் 20 ட்ரோன்களை அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

இஸ்ரேல் ஒரே இரவில் தெஹ்ரானில் 80க்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்கியது. ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஈரானிய அணுசக்தி திட்டத்தின் (SPND) தலைமையகத்தையும் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

 இதுவரை, ஈரானில் இஸ்ரேலிய தாக்குதலில் 128 கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 40 பேர் பெண்கள். சுமார் 900 பேர் காயங்களுக்காக  சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments