சுந்தர். சி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வல்லான் திரைப்படம் நாளை (ஜனவரி 24) திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார்.
