நடிகர் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய கங்கை அமரன். இவர் வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.
தற்போது மீண்டும் டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
காரைக்குடியில் அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.
தவிர, அந்தப் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
