முன்னொரு காலத்தி நடிகர்களின் பக்கம் மட்டும் இருந்த ரசிகர்களின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்தவர்களும் பிரமிக்க வைத்தவர்களும் நிறையபேர் உண்டு. முதன்முதலாக நடிகர்களைச் சொல்லி படத்தின் பெயரச் சொன்னதை மாற்றியவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார் ரசிகர்கர்கள்
அதேப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து சிகரமாக்கியவர்… இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
அவர் டைரக்ஷனில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
பொதுவாக நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்துக்கு பிறகு நாடகம் ஆரம்பமாகும். ஆனா தன்னுடைய நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் பாணி. இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது . படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ குறளும் குரலும் ஒலிக்கும்ம். அப்பாலே, ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தது

கோலிவுட் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசிபேரை நம் மனதில் நிற்கவைச்சும் சாதித்தவர் பாலசந்தர்.
குறிப்பாக எம்ஜிஆர் – சிவாஜிக்குப் பிறகான அந்த இடத்தை, கமல் – ரஜினியை உருவாக்கி நிரப்பினார்.
தன்னைச் சுற்றியுள்ள கலைஞர்களை அற்புதமாகப் பயன்படுத்துவார். எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த இசையை தன் படங்களுக்குள் இணைத்திருக்கிறார்.
‘எத்தனையோ இயக்குநர்களின் படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். பாலசந்தருக்கு பாட்டு எழுதுவதுதான் சிரமமாக இருக்கும். ஒரு பாட்டுக்குள் படத்தின் ஜீவன் மொத்தத்தையும் சொல்லச் சொல்லுவார்’ என்று தெரிவிச்சார் கவியரசு கண்ணதாசன். இசையைப் போலவே பாடல்களும் தனியிடம் பிடித்துவிடும்.
இன்று ரெண்டு மணி அல்லது மூனு நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம்.
ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி… என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!
ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவாய்ங்க சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார்.
ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள்.
கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.
உடலால் மறைந்தாலும் நினைவடுக்களின் இன்றும் வாழும் கேபி சாருக்கு பிறந்த நாள் வணக்கங்கள்

