Saturday, March 21, 2026
HomeUncategorizedஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இன்று மதியம் ஆஜராக உத்தரவு!

ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இன்று மதியம் ஆஜராக உத்தரவு!

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு பிற்பகல் 2.30க்கு ஒத்திவைத்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments