பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் விஜய் பிரச்சாரம்ஒரு பக்கம் இருந்தாலும், ஜனநாயகன் பட லீக் சம்பவம் அதைவிட பரபரப்பாக இணையத்தில் சூடு பிடித்துள்ளது. ஜனநாயகன் படத்தின் சீன்கள் முதலில் இணையத்தில் கசிந்தது, அந்த ஆர்ப்பாட்டம் அடங்குவதற்குள் முழு படமும் இணையத்தில் பரவியது.
இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர் நடிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சென்சார் சர்டிபிகேட் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் இந்த சமயத்தில் இது போன்ற சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் சினிமா வட்டாரத்திற்குள் மட்டும் இல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அதைப்பற்றி ஏதும் கவலைப்படாமல் பல ரகமான மீம்ஸ்களை இணையத்தில் பரவ விட்டு ஜனநாயகன் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதில் சில மீம்ஸ் இதோ

Images credit : social media, memes pages, instagram