தமிழ் சினிமாவில் பிரபல எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வரும் மோகனுக்கும், வரலட்சுமிக்கும் 1980ம் ஆண்டு செப்10ம் தேதி பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி. மதுரையில் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்த ரவி, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னையில் படித்து முடித்தவர். விஸ்காம் படிக்க சென்னை லயோலா கல்லூரிக்கு சென்ற ரவிக்கு, கல்லூரியில் சேர இடம் இல்லை என்று மறுக்கப்பட்டது. சினிமா குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நடிக்க சென்றுவிடுவார் என்று இடம் தர மறுத்த கல்லூரி நிர்வாகத்திடம், என் மகனுக்கு நடிப்பெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறி விஸ்காம் படிப்பில் சேர்த்துவிட்டு வந்துள்ளார் தந்தை மோகன். ஜெயம் ரவி இன்றைய தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்க முதல் காரணம் அவரது அண்ணன் மோகன் ராஜாதான். ஆம், சிறுவயது முதலே தனது தம்பியை வெற்றிபெற வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்ந்துள்ளார் மோகன் ராஜா. ஒரு சினிமா குடும்பம் என்றால் எளிதாக திரையுலகில் வாய்ப்பு பெற்று ஜொலித்து விடலாம் என்று எண்ணும் நினைக்கும் பலருக்கு தெரிவதில்லை, உழைத்தால் மட்டுமே சினிமாவிலும் உயரமுடியும் என்று.
ஆம், பிரபல எடிட்டரின் மகன் என்றாலும், நடிப்பில் ஆர்வம் வந்த பிறகு முறையாக நடிப்பை கற்றுக்கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ரவி. சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்ததால் நலினி பாலகிருஷ்ணன் எனும் நடனக்கலைஞரிடன் இருந்து பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுத்தேர்ந்தார் ரவி. ஆம், தனது 12ம் வயதிலேயே அரங்கேற்றைத்தையும் முடித்துவிட்டு, கல்லூரி காலத்திற்கு பிறகு மும்பையின் கிஷோர் கபூர் எனும் நிறுவனத்தில் நடிப்பையும் கற்றுத்தேர்ந்தார்.
ஒரு பக்கம் சினிமாவில் ஆர்வம் கூடக்கூட, கேமரா, எடிட்டிங், கதை எழுதுவது போன்ற சினிமாவில் அங்கங்களை கற்கத்தொடங்கினார். அதிலும் குறிப்பாக 2001ம் ஆண்டு நடிகர் கமலஹாசனின் ஆளவந்தான் திரைப்படத்தில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் ரவி.
பாவா பாவமரிடி மற்றும் பால்நட்டி பவுருஷம் என்ற தெலுங்கு படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து இளமை கால நடிப்பு பசிக்கு தீனீபோட்டுள்ளார் ரவி. இரு படங்களும் தந்தையால் தயாரிக்கப்பட்ட படங்கள் என்றாலும், சினிமாவில் ரவி எளிதாக நுழைந்துவிட்டார் என்று விமர்சிக்கும் பலருக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ரவி.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ரவி நினைத்ததை விட, தனது தம்பி சினிமாவில் வென்றிட வேண்டும் என்று கனவு கண்டார் அண்ணனும், இயக்குநருமான மோகன் ராஜா. ஆம், 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தை இரண்டாவது படமாக மோகன் ராஜா இயக்க, இப்படத்தை அவரது தந்தை மோகனே முன் நின்று தயாரித்தார். படத்தில் நடித்தவர் இருபத்து மூன்றே வயதாக இளைஞன். ஆனாலும், உணர்ச்சி மிக்க கிராமத்து காதல் கதையை தனது நடிப்பால் அசால்டாக நடித்து முடிக்கிறான் அந்த இளைஞன். காதல் காட்சிகளானாலும் சரி, சண்டைக் காட்சிகளானாலும் சரி அனைத்தையும் அனாயசமாக முடித்துக்காட்டி தனக்கான பெயரை தமிழ் சினிமா வரலாற்றில் ஆழ எழுதிக்கொண்டான். ஆம், அவர்தான் ரவி என்னும் ஜெயம் ரவி. (கட்டிங் காண்ணையா)
படத்தின் முதல் நாளில் க்ளாப்ஸ் அடித்து உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிவைக்க, பெரிய பட்ஜட்டோடு தயாரானது ஜெயம் திரைப்படம். கிராமத்து வாழ்க்கையில், ஏழை குடும்பத்தில் பிறந்து கல்லூரி செல்லும் ரவிக்கு, கல்லூரியிலும், ரயிலிலும் பூக்கும் காதலை அதன் அழகியலோடு வெளிப்படுத்தினான் இளைஞன் ரவி. அன்றாடம் வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தும் ரவிக்கும், வசதியான குடும்பத்தில் பிறந்த சுஜாதாவுக்கும் இடையேயான காதல் இறுதியில் எப்படி ஒன்று சேர்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த கதையில், நம்ம ஊர் பையன் என்பதைப் போல நடிப்பில் அசத்தினார் ரவி.சகீலா, செந்தில், மயில்சாமி போன்ற பிரபல கலைஞர்கள் இப்படத்தில் கை கோர்த்தது கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது. கவிதையே தெரியுமா பாடலில் கயிறு கட்டி அசத்துவது, காதல் காதல் எனும் பாடலில் கண்ணீர் விட்டு அழுவது என்று முதல் படத்திலேயே வெறைட்டி காட்டினார் ரவி. சொந்த அண்ணன் இயக்க, படத்தை அப்பாவே தயாரித்திருந்தார். படம் எடிடிங் முடிந்து ப்ரிவ்யூவ் ஷோ பாக்க சென்ற எடிட்டர் மோகனை தொடர்புகொண்டு பேசிய ரஜினி, நானும் பிரிவ்யூவ் ஷோ பாக்கலாமா என்று அடம்பிடித்து கேட்டு, பின்பு வந்து பார்த்துள்ளார். பாதி படம் முடிந்த வேளையில், ஏன் இந்த படத்தை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளீர்கள் என்று மோகனிடம் கேட்டார் ரஜினி. அதற்கு பதிலளித்த மோகன், இது வெறும் படம் அல்ல, என் பிள்ளைகளின் வாழ்க்கை.. அதற்காகத்தான் இவ்வளவு பொருட்செலவில் படம் என்று நெகிழ்ந்து பேசி முடிக்க நல்ல ஏற்பாடுகளுடன் படம் வெளியானது.
ரவிக்கு அறிமுக படம் என்றாலும், இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் குறிப்பாக கவிதையே தெரியுமா பாடலும், ‘போயா போ’ என்ற வசனமும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஏ அந்த படத்த பாத்தீங்களாப்பா, என்னா அருமையா எடுத்திருக்காங்க என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது ஜெயம். படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று ஒரு பக்கம் பாராட்டுகள் குவிய, மற்றொரு பக்கம் ரீமேக் படம் தானே என்ற விமர்சனமும் இருக்கவே செய்தது.
ஆம், 2002ம் ஆண்டு தெலுங்கில் அதே பெயரில் வெளியான ஜெயம் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தார் இயக்குநர் மோகன் ராஜா. அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, 25 கோடி வசூலை ஈட்டி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்ததது ஜெயம் திரைப்படம். அங்குதான் தமிழ் சினிமாவில் பிறந்தான் ஜெயம் ரவி எனும் நாயகன்.
இதை அடுத்து இன்றைக்கும் டாப் லிஸ்டில் ஒருவராக பயணிக்கும் ஜெயம் ரவியும் வெற்றி, தோல்வி என பரஸ்பரம் இருவேறுபட்ட கதைக்களங்களில் நடித்திருக்கிறார் . ஆனால் என்றைக்கும் ஜெயம் ரவியின் படத்தில் ஆபாசம். அதீத வன்முறை போன்ற விஷயங்கள் இருந்ததில்லை. அவருடைய திரைப்படங்கள் எதுவும் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை முன்னிறுத்தியதில்லை. மாறாக மண் சார்ந்த , மக்கள் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்துவதிலும், அப்படிப்பட்ட தீங்கில்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாலேயே அனைத்து தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்ற நாயக நடிகராக விளங்குகிறார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். தொடர்ந்து ஒவ்வொரு படத்தின் கதையிலும் சரி, தன்னுடைய கதாபாத்திரத்திலும் சரி ஏதேனும் ஒரு புதுமை இருப்பதை உறுதி செய்வது ஜெயம் ரவி அமைதியாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதனை என்கிறது சினிமா வட்டாரம்.
“போ writerta போய் உக்காரு, கேமரா மேன் கிட்ட போய் கத்துக்கோ, போ.. நீ ஏன் என் கம்பெனி ல வேல செய்ற, போய் வேற கம்பெனி ல வேல செய்.. போடா என் பிள்ளைன்னு சொல்லாத வெளில.. யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லிதான் எங்கப்பா எங்கள வளத்தாரு..” என்று தனது தந்தை குறித்து விழா மேடையில் நா தழுதழுக்க பேசினார் ஜெயம் ரவி.
அப்ப சொன்னபடி செயல்பட்டு இதுவரை பல வெற்றிப்படங்களை கொடுத்தபடி தமிழ் சினிமாவின் தனி ஒருவனாக வலம்வரும் ஜெயம் ரவிக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி ???

