Sunday, March 22, 2026
Homeவணிகம்அரசு உதவியை நாடும் நகை ஆபரண ஏற்றுமதியாளர்கள்!

அரசு உதவியை நாடும் நகை ஆபரண ஏற்றுமதியாளர்கள்!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு ஜனாதிபதி டிரம்ப்  50 சதவீத வரி விதித்தார். இதனால் இந்திய உணவு பொருட்கள், ஜவுளி மற்றும் நகை ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் ஏற்றுமதி வரி விதிப்பால் கடும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மற்றும் வரி சலுகைகள் காரணமாக உணவு மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து வைரம், தங்கம் மற்றும் ரத்தின நகைகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி செலவு அதிகரித்து விற்பனை போட்டி குறைந்துள்ளது.

இதனால் அரசு உடனடியாக தலையிட்டு வரி சலுகைகள், ஊக்கத்திட்டங்கள், நிதி ஆதரவு அளித்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி கவுன்சில் சார்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments