கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தின் 2வது பாகத்தை எடுக்க தடை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ல் வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தமிழில் இந்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படம் தெலுங்கு உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்ய உரிமை பெற்றுள்ளனர். இதற்கிடையே இந்த படத்தின் 2வது பாகத்தை தயாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் கொல்லத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் கொல்லம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

